அதிக ஊட்டச்சத்து நிறைந்த முருங்கைக் காய் இருந்தாலும் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?
நமக்கு மிகவும் எளிதாக கிடைக்க கூடிய முருங்கைக் காயில் அதிக சத்துக்கள் இருக்கின்றன. இந்த முருங்கைக் காயை பலரும் சாப்பிடுவது குறைவு.
இதில் இருக்கும் புரோட்டின் சத்துக்கள் முட்டைக்கு இணையானது. இதில் மனிதனுக்கு தேவையான பொட்டாசிய சத்துக்கள் இருக்கின்றன.
இதை தவிர கால்சியம், வைட்டமின் சி, ஏராளமான இரும்புச்சத்து இருக்கின்றன. சில நோய்களுக்கு முருங்கைக் காய் சூப் வைத்து கொடுத்தால் அது நிவாரணியாக செயல்படும்.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த முருங்கைக் காய் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா? வேறு யாரெல்லாம் இதை சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முருங்கைக் காய்
இந்த முருங்கைக் காய் மூலநோய் உள்ளவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் போன்றோர் முருங்கைக் காய் சாப்பிடலாம்.
இது ரத்தத்தை சுத்தமாக்கும் சக்தி கொண்டது. ரத்ததில் உள்ள சக்கரையின் அளவை இது குறைக்ககூடியது. இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் முருங்கைக் காய் அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.
கர்ப்பிணிகளுக்கு இந்த முருங்கைக் காய் மிகவும் நல்லது. தாய்க்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும், அதிக நன்மையை தருவதால், முருங்கைக் காய் கர்ப்ப காலத்தில் ஒரு சிறந்த சத்துணவாக பயன்படுகிறது.
இதனால் கருவின் உறுப்புகள் நன்றாக வளரும். வைட்டமின் A உள்ளதால் கருவிற்கு மூளை மற்றும் கண்பார்வை வளர்ச்சியும் மேம்படும்.
இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் இது உதவும். ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முருங்கைக் காய் தவிர வேறொன்றும் மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இதனால் இதை கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் 100 கிராம் அளவில் முருங்கைக் காய் சாப்பிடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |