கல்லீரலில் கொழுப்பு படிந்திருந்தால் இந்த அறிகுறிகள் காட்டுமா?
கொழுப்பு படிந்த கல்லீரலுக்கு நீண்டகாலமாகவே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், அதன் மீதான அழற்சி அதிகரிக்கும். கல்லீரல் கொழுப்பு நோயின் இறுதிகட்ட வடிவம் தான் சிரோசிஸ். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உயிர் அபாயம் ஏற்படும்.
கலீரல்
நமது உடலில் இருக்கும் கல்லீரல் 500 ற்கும் மேற்பட்ட செயற்பாடுகளை செய்கிறது.கல்லீரலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஒட்டுமொத்தமாகவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படும்.
கல்லீரலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதன் காரணமாக கல்லீரல் கொழுப்பு நோய் உண்டாகிறது. இந்த பகுதியில் கொழுப்பு படிந்தால் இப்படி கொழுப்பு அதிகரிக்கும் போது உள்ளங்கைகள் சிவந்து காணப்பட்டால், கைகளில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும்.
கல்லீரல் முறையாக செயல்படவில்லை என்றால் உங்கள் விரல் நகங்கள் வெளிறிய நிறத்தில் காணப்படும். குறிப்பாக கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் நகங்கள் நிறமிழந்து வெள்ளையாக காணப்படும்.
ரத்த நாளங்கள் வேலை செய்யாமல் போவதால் விரல் நுனிகள் விரிந்து வழக்கத்தை விட வட்டமாக மாறி உருண்டையாக காணப்படும்.
சோர்வு, ரத்தக்கசிவு, பசியின்மை, குமட்டல், கால்கள், பாதங்களில் வீக்கம், உடல் எடை குறைவு, சருமத்தில் அரிப்பு, மஞ்சள்காமாலை, வயிற்றில் நீர் கோர்த்துக் கொள்வது, சருமத்தில் சிலந்தி வலைபோல ரத்த நாளங்கள் தென்படுவது ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
இந்த நோய் வருவது தெரிந்து கொண்டால் முன்கூட்டியே சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லதாகும். தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை சிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். இது பெரும்பாலும் 50 வயதிற்கு மேல் வருவது கூடுதலாக காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |