செல்போனை படுக்கையில் வைத்து உறங்குபவரா நீங்க? மூளைக்கு இந்த பாதிப்பு உறுதி
தற்காலத்தில் செல்போனின் தேவை நாளுக்கு நாள் அதிகதித்து வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் செல்போன் இன்றி வாழ்க்கை நடத்தவே முடியாது என்கின்ற அளவுக்கு அதன் தாக்கம் வாழ்வியலோடு பின்னி பிணைந்த ஒன்றாக மாறிவிட்டது.
பல விதமான ஆப் கள், மற்றும் கண்ணை கவரும் கேம்கள், புகைப்படம் எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செல்பி ஆப்கள், வித விதமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் இப்படி எண்ணற்றவை மக்களை செல்போனிற்குள் இறுக்கமாக கட்டி போட்டுவிடுகிறது.
அதனால் தூங்கும் போதும் கூட செல்போனை பக்கத்திலேயே வைத்துக்கொள்கின்றார்கள். ஆனால், உறங்கும் போது அருகில் மொபைல் போன்களை வைத்திருக்கக் கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஆனால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த தவறை பெரும்பாலானர்வகள் செய்து வருகின்றார்கள்.
அலாரம் வைப்பதற்கும், நேரம் பார்ப்பதற்கும், அழைப்பு வந்தால் உடனே எடுப்பதற்கும், முக்கிய குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்க வேண்டும் என்பதற்கு என ஏதாவது ஒரு முக்கிய காரணத்துக்கான உறங்கும் போது மொபைல் போன்களை அருகிலேயே வைத்து கொண்டு தூங்குகிறோம்.
அதனால் உடல் மற்றும் உள ரீதியாக ஏற்படுகின்ற தாக்கங்கள் தொடர்பில் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதிப்புகள் என்ன?
செல்போனில் இருந்து வரும் கதிர்கள் செல்போனுக்கு சிக்னல் தரும் இடத்தில் இருந்து வரும் ரேடியோ ப்ரிக்குவேன்சியை விட 1000 மடங்கு அதிகமானது என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிடுகின்றது.
சொல்போனை அருகில் வைத்து தூங்குவதால், அந்த கதிர்வீச்சினால், மூளைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு காணப்டுகின்றது. குழந்தைகளின் மூளைவளர்ச்சியிலும் இதன் தாக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதாலும் அதனை அருகில் வைத்து தூங்குவதாபலும் இதய நோய் அபாயம் அதிகரிக்கின்றது.
செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் இதயத்தின் மென்மையான திசுக்களில் ஊடுருவி இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கின்றது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
செல்போனை தலையணைக்கு அருகில் வைத்து தூங்குவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
இதனுடன் காலையில் தலைவலியையும் தெளிவின்மையையும் உணர்வீர்கள். மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உங்கள் மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதே இந்த நிலைக்கு காரணமாகும்.
இரவில் படுக்கைக்கு அருகில் போனை வைத்துக்கொண்டு தூங்குவது ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றுது.
மேலும் கர்ப்பிணி பெண்கள் செல் போனை அருகில் வைத்து தூங்குவதால் மரபணு மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியிலும் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், நீங்கள் இரவில் தூங்கும் முன்னர் மொபைல் போன்களை தூரமாக வைத்துவிட்டு படுக்கைக்கு செல்ல வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |