சர்க்கரை நோயாளர்களின் ஒரு வேளை பசிக்கு ஏற்ற நெல்லிக்காய் ஜுஸ்..
பொதுவாக தற்போது இருக்கும் தவறான பழக்கங்ள், முறையற்ற வாழ்க்கை முறை இவை இரண்டினாலும் அநேகமானவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மருந்து வில்லைகள் எடுத்து கொள்ளல், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இப்படியான சில நடைமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.
ஆனால், மருந்து வில்லைகளை தாண்டி உணவின் மூலம் நாம் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். அந்த வகையில், சர்க்கரை நோயாளர்களுக்கு அதிகமாக பசி ஏற்பட்டால் உணவே இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
திரவ உணவுகளை எடுத்து கொள்ளலாம். இப்படியான நேரங்களில் கைகொடுக்கும் ஜுஸ் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் - 2
- மஞ்சள் - கால் டீஸ்பூன்
செய்முறை
சுத்தமான பெரிய நெல்லிக்காய் இரண்டை எடுத்து அதிலுள்ள விதையை அகற்றி விட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி சாரில் போட்டு மஞ்சள், வெந்நீர் ஆகிய இரண்டையும் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த சாற்றை ஒரு கப்பிற்கு மாற்றி சம அளவில் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
5 நிமிடங்களுக்கு பின்னர் சாற்றை தனியாக வடிக்கட்டி டம்பளரில் ஊற்றினால் நெல்லிக்காய் ஜுஸ் தயார்!
இதனை காலை வேளைகளில் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் குடிக்கலாம் அல்லது இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் குடிக்கலாம்.
முக்கிய குறிப்பு
உடம்பில் வேறு ஏதாவது பிரச்சினையுள்ளவர்கள் உரிய மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் குடிப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |