இறைச்சி அதிகமாக சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருமா? ஆய்வின் வெளிச்சம்
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நோய்களில் ஒன்று தான் பெருங்குடல் புற்றுநோய்.
உணவு சார்ந்த பழக்க வழக்கங்கள் பெருங்குடல் புற்றுநோயின் முக்கிய காரணமாக அமைகிறது.
சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அடிக்கடி சாப்பிடுபவர்கள் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சி ஆகிய இறைச்சிகள் பதப்படுத்தப்படாத நிலையில் சாப்பிடுபவர்களுக்கு தாக்கம் குறைவாகவே இருக்கும்.
அந்த வகையில் இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு எப்படியான தாக்கங்களை பெருங்குடல் புற்றுநோய் கொடுக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஒருவர் ஒரு நாளைக்கு 70 கிராமுக்கும் குறைவான சிவப்பு இறைச்சியை மட்டுமே உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி சமைக்கிறது.
பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வழிமுறைகள்
1. சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
2. இறைச்சிகளுக்கு பதிலாக பருப்பு வகைகள், வெள்ளை நிற இறைச்சி அதாவது சிக்கன் அல்லது மீன் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது.
3. காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனின் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்து கொள்ளும் போது செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
4. பெருங்குடல் புற்றுநோயை தடுப்பதற்கான சிறந்த வழி, வெஜிடேரியன் உணவுகளை சாப்பிடுதல் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |