குதிரைவாலி அரிசியில் ஒரு முறை இப்படி கீர் செய்து சாப்பிடுங்க! சுவை அட்டகாசமாக இருக்கும்
வீட்டில் விஷேசம் வைக்கும் போதெல்லாம் பாயாசம் அதாவது கீர் செய்வது வழக்கம். இதை தவிர சைவ உணவுகள் செய்யும் போது கீர் செய்வது வழக்கம். இதை எத்தனை வகையான பொருட்களையும் வைத்து செய்யலாம்.
ஆனால் குதிரைவாலி அரிசியில் இதை செய்யும் போது சுவை பிரமாதமாக இருக்கும் இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- குதிரைவாலி 1 கப்
- அரை லிட்டர் பால்
- 2 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் முந்திரி
- 1 ஸ்பூன் பாதாம்
- 1 ஸ்பூன் பிஸ்தா
- 1 கப் குதிரவால் அரிசி
- கால் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி
- 1 ½ கப் சர்க்கரை
- கொஞ்சம் குங்குமப்பூ
செய்முறை
ஒரு பாத்திரத்தில், பாலை சேர்த்து கொதிக்க வைகக்வும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து குதிரைவாலி அரிசியை சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை பாலில் சேர்க்கவும்.
தொடர்ந்து வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு சேர்த்து வறுத்துகொள்ளவும். தொடர்ந்து கொதிக்கும் பாலில் சர்க்க்ரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் நட்ஸ் சேர்க்கவும். கடைசியாக ஜாதிக்காய் பொடி சேர்த்து கிளரவும். பரிமாறும் போது குங்குமப் பூ சேர்த்து கிளரவும்.
இதை நமக்கேற்ற பாத்திரத்தில் பரிமாறி கொள்ளலாம். இதை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இது மிகவும் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |