மழை பெய்யும் போது AC-யை பயன்படுத்தலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
மழை காலத்தில் வீட்டில் AC பயன்படுத்தலாமா? கூடாதா? என்ற சந்தேகம் நமக்கு இருக்கும் நிலையில், தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மழை காலத்தில் AC பயன்படுத்தலாமா?
கோடை காலத்தில் பல வீடுகளில் AC-யை பயன்படுத்துகின்றனர். ஆனால் வெயிலுக்கு மத்தியில் சில தருணங்களில் கோடை மழையும் பெய்கின்றது.
இத்தருணத்தில் இடி மற்றும் மின்னல் ஏற்படுவதுடன், மழை பெய்கின்றது. இத்தருணத்தில் AC-யை பயன்படுத்தலாமா? ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கான பதிலை இங்கு தெரிந்து கொள்வோம்.
மழைகாலத்தில் ஏசி பயன்படுத்தலாமா?
எந்த வகையான ஏசி என்றாலும் லேசான மழை பெய்யும் போது அதனை பயன்படுத்தினால் ஆபத்து இல்லையாம். ஏனெனில் வெளிப்புற ஏசி யூனிட்டில் இருக்கும் தூசு குறித்த மழையில் சுத்தமாகிவிடும்.
மழை பெரிதாக பெய்யும் போது ஏசியின் வெளிப்புற யூனிட் நேரடியாக மழையில் நனையால் இருக்க வேண்டும். ஆதலால் கனமழை பெய்யும் போது ஏசி வைத்திருப்பவர்கள் கவனமாகவே இருக்க வேண்டும்.
வெளிப்புற யூனிட் மழையை தாங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து மழையில் நனையும்போது ஓரளவு சேதமடைந்துவிடும். ஆதலால் எப்பொழுதும் மழை நீர் விழாத இடத்தில் ஏசியின் வெளிப்புற யூனிட்டை வைக்க வேண்டும்.
அளவுக்கதிமான மழை பெய்யும் போது ஏசி-யில் தண்ணீர் படாமல் வைக்க முடியவில்லை என்றால், மழை காலங்களில் ஏசி-யை ஆன் செய்யாமல் இருப்பது நல்லது.
ஏனெனில் வயரிங் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஏசி-யை அணைத்துவிட்டு வயரிங் பிரச்சினையை சரிசெய்த பின்பு தான் ஏசியை பயன்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |