தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனி தூக்கி எறியாதீங்க...
தர்பூசணி ஏராளமான சுகாதார நன்மைகளால் நிரம்பியுள்ளது. இதில் இயற்கையாகவே நீர் உள்ளடக்கம் உள்ளது.
மேலும், சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மற்றும் பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற தாதுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றது.
கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் தர்பூசணியின் சீசனும் கூடவே ஆரம்பித்துவிடும். தர்பூசணியானது அதிகளவான நீர்ச்சத்து கொண்டிருப்பதால் கோடைகாலத்தில் உடலை போதுமான அளவு நீர்சத்துடன் வைத்திருக்க பெரிதும் துணைப்புரியும்.
அனைவருமே தர்பூசணயில் உள்ள சிவப்பு நிறத்தில் இருக்கும் சதைப்பற்றான பகுதியை மாத்திரம் சாப்பிட்டு விட்டு அதன் கீழ் இருக்கும் வெள்ளை நிற பகுதியை குப்பையில் போட்டு விடுவோம்.
ஆனால் நாம் தூக்கியெறியும் இந்த தர்பூசணி தோல் பகுதியில் ஏறாளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தர்பூசணி தோலின் நன்மைகள்
தர்பூசணியின் தோல் பகுதியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமான பிரச்சினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தர்பூசணி தோலை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் துணைப்புரிக்கின்றது.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்க தர்பூசணி தோல் மிகவும் உதவியாக இருப்பதுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த தோல் பகுதியில் லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாக காணப்படுகின்றது. அதனால் வயதான தோற்றத்தை தடுப்பதுடன் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் போக்கி முகத்தை பொலிவாக்க உதவுகின்றது.
தர்பூசணி தோலை பச்சையாக சாலட் அல்லது ஜூஸாக சாப்பிடலாம். தர்பூசணி தோலில் இருந்து ஹல்வா, சட்னி செய்யலாம். தர்பூசணி தோலைப் கூட்டு போல் சமைத்தும் சாப்பிடலாம்.
இது உடல் அசதியையும் போக்கும் நீண்ட நாட்கள் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் தர்பூசணியின் வெள்ளைநிற தோல் பகுதியை சாப்பிடுவது சிறந்த தீர்வாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |