(Vitamin k) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் K
வைட்டமின் கே என்பது இரத்தம் உறைதல், எலும்பு ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது.
அறிவாற்றல் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்ற வைட்டமின்-கே யின் நன்மைகள் குறித்தும் இந்த வைட்டமின் செறிந்து காணப்படும் உணவுகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் கே
இரத்தம் உறைதல் ,எலும்பு வளர்சிதை மாற்றத்தில் முக்கியமான புரதம் மற்றும் உறைதல் காரணியான புரோத்ராம்பின் உற்பத்தி செய்ய உடலுக்கு வைட்டமின் கே தேவைப்படுகிறது.
வார்ஃபரின் அல்லது கூமடின் போன்ற இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், முதலில் மருத்துவரிடம் கேட்காமல் கூடுதல் வைட்டமின் -கே உட்கொள்ளக் கூடாது.
பொதுவாக வைட்டமின் கே இருவகைப்படுகிறது. வைட்டமின் கே- 1, வைட்டமின் கே- 2 என இரு வகையாக உள்ளது. முதல்வகையான வைட்டமின் கே-1 பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் காணப்படுகிறது. இரண்டாவது மாமிசங்கள் மற்றும் புளிக்க கூடிய தாவர உணவுகளில் அதிகமாக காணப்படுகின்றது.
பொதுவாகவே மாட்டின் இறைச்சி பல விதமான நன்மைகளை கொண்டுள்ளது. அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது.
அரை கப் மாட்டின் கல்லீரலில் 72 மைக்ரோகிராம் வைட்டமின் k உள்ளதாகவும் , நூறு கிராமில் 106 மைக்ரோகிராம் உள்ளதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
கோழி இ்றைச்சி பலரும் விரும்பி உண்ணும் உணவாகவே இருந்து வருகிறது. அரை கப் கோழி இறைச்சியில் 51 மைக்ரோகிராம் வைட்டமின் கே-யும் ,100 கிராமில் 60 மைக்ரோகிராம் வைட்டமின்-கே யும் கிடைக்கின்றது.
நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் கொத்தமல்லியில் அதிகளவு வைட்டமின் -கே அடங்கியுள்ளது. 100 கிராம் எடுத்துக் கொண்டால் 1640 மைக்ரோகிராம் வைட்டமின்- கே உடலுக்கு கிடைக்கின்றது.
திராட்சை பழங்கள் கண்களுக்கும் நல்லது. அவற்றில் பத்து கிராம் சாப்பிட்டால் 3.5 மைக்ரோகிராம் வைட்டமின் kயும் , 100 கிராமில் 15 மைக்ரோகிராம் வைட்டமின் kவும் கிடைக்கும்.
இன்னும் பல விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் K சத்து நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை, உங்களது மருத்துவரின் ஆலோசனை பேரில் உண்ணலாம்.
ஒரு நாளைக்கு 120 மைக்ரோகிராம் வைட்டமின் K சத்தை உட்கொண்டால் மட்டுமே வைட்டமின் K குறைபாடு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
ரத்தத்திற்கு ஆரோக்கியமும் உடல் வலுவும் அளிக்கும் மாதுளைப்பழத்திலிருந்து அரை கப் சாப்பிட்டால் 14 மைக்ரோகிராம் வைட்டமின் kயும் , 100 கிராம் சாப்பிட்டால் 16 மைக்ரோகிராம் வைட்டமின் kயும் கிடைக்கும்.
ஒரு தக்காளியில் 4.3 மைக்ரோகிராம் வைட்டமின் kயும் , 100 கிராம் சாப்பிட்டால் 43 மைக்ரோகிராம் வைட்டமின் kயும் கிடைக்கும்.
மூளை அல்லது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் இரத்தக் கட்டிகளைத் தடுக்க வார்ஃபரின் போன்ற இரத்தத்தை மெலிக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வைட்டமின் K இன் உறைதல் திறனைக் குறைப்பதன் மூலம் அல்லது தாமதப்படுத்துவதன் மூலம் அவை செயல்படுகின்றன. வைட்டமின் கே உட்கொள்ளலை திடீரென அதிகரிப்பது அல்லது குறைப்பது இந்த மருந்துகளின் விளைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வைட்டமின் கே உட்கொள்வதை தினமும் சீராக வைத்திருப்பது இந்தப் பிரச்சனைகளைத் தடுக்கலாம். கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது ஆன்டிகான்வல்சண்டுகளை எடுத்துக் கொண்டால், கருவில் அல்லது புதிதாகப் பிறந்த குழந்தையில் வைட்டமின் கே குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றது.
வலிப்பு எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றான ஃபெனிடோயின் மற்றும் டிலான்டின். கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள் கொழுப்பை உறிஞ்சுவதில் தலையிடுகின்றன.
வைட்டமின் K ஐ உறிஞ்சுவதற்கு கொழுப்பு அவசியம். எனவே இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளும் எவரும், வைட்டமின் கே உட்கொள்ளல் பற்றி தங்கள் மருத்துவரிடம் ஆலாசனை பெறுவது அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |