வைட்டமின் D3 குறைபாடுகளை அலட்சியப்படுத்தாதீங்க... அறிகுறிகள் என்னென்ன?
உடம்பிற்கு வைட்டமின் D3 என்பது முக்கியமான வைட்டமின் ஆகும். இந்நிலையில் வைட்டமின் டி3 செயல்பாடு மற்றும் குறைபாடுகளினால் ஏற்படும் அறிகுறிகளை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் D3
வைட்டமின் டி3 சத்தானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒரு வைட்டமின் ஆகும்.
வைட்டமின்-டி3 மனித உடலில் கொழுப்புகளால் சூரிய ஒளியின் உதவியுடன் தயாரிக்கப்படும் ஒரு பயனுள்ள கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின் ஆகும்.
ரத்த ஓட்டத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் சத்துக்களை முறையான உறிஞ்சுதல் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு முக்கியமான காரணமாகின்றது.
ஒட்டுமொத்த உடல்நல நிலையை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்களுக்கு சிகிச்சையளிக்க முக்கியமாக உதவுகின்றது. pH அளவுகளை பராமரிக்க உதவுகின்றது.
வைட்டமின் டி3 உணவுகள்
வைட்டமின் டி3 சத்துக்களை கல்லீரல் எண்ணெய், கடல் மீன்களான சால்மன், டுனா, மத்தி மீன், பால், சோயா பால் மற்றும் பாலாடைக்கட்டி, முட்டை, காளான்கள் போன்றவை அதிகம் உள்ள உணவுகளாகும்.
வைட்டமின் டி3-யை உணவு அல்லது துணை பொருட்களுடன், மருந்து அல்லது ஊசி மூலம் உங்கள் உடலுக்குள் கொடுக்கச் செய்யலாம்.
ஆனால் மருந்தின் பயன்கள், அளவு ஒவ்வொரு நபர்களுக்கும் மாறுபடுமாம்.
உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
குழந்தைகளிடையே எலும்பு நோயின் அறிகுறிகளையும், பெரியவர்களுக்கு எலும்புகள் நொறுங்குத் தன்மை நோயையும் ஏற்படுத்துகின்றது.
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், செலியக் மற்றும் க்ரோன் நோய் அல்லது அடர் தோல் நிறம் உள்ளவர்களுக்கு வைட்டமின்-டி3 பற்றாக்குறை ஏற்படும்.
வைட்டமின்-டி3 சில நேரங்களில் சிறுநீரகம் மற்றும் இதயச் செயலிழப்பால் ஏற்படும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
பொதுவான அறிகுறிகள்
எலும்புகளில் பலவீனம், சோர்வு, மூட்டுகளில் வலி
எலும்புகள் எளிதில் பாதிப்பு ஏற்படுதல் அல்லது உடையும் தன்மைக்கு செல்லுதல்
எலும்பு புற்றுநோய்
இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுத்துவதால் உடல் இன்சுலினை பயன்படுத்துவது தடுக்கப்படுகின்றது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல்
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகுதல்
குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுப்போக்கு, பசி குறைதல், தலைச்சுற்றல், தலைவலி, தோல் வெடிப்பு, நெஞ்சு வலி போன்ற பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |