வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக கூகுள் இறக்கும் மெசேஜ் செயலி... எப்பொழுது அறிமுகம்?
கூகுள் நிறுவனம் அண்மைக்காலமாக தனத மெசேஜ் செயலியை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
கூகுள் குறுஞ்செய்தி செயலி
வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக தனது மெசேஜ் செயலியில் ஒவ்வொரு மாற்றத்தையும் கொண்டு வருகின்றது.
சமீபத்தில் குரூப் சேட்டிங் புகைப்படங்களை போட்டோமோஜியாக மாற்றும் அமைப்பை சேர்த்துள்ள கூகுள் தற்போது நாம் அனுப்பும் குறுஞசெய்தியை திருத்தம் செய்யும் அம்சத்தினையும் கொடுக்க இருக்கின்றது.
விரைவில் வர இருக்கும் இந்த எடிட் அம்சத்துக்கு காலவரம்பு இருக்குமா? என்ற தகவல் வெளியாகவில்லை. ஏனெனில் வாட்ஸ்அப் மற்றும் ஐ குறுஞ்செய்திகளில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அனுப்பப்பட்ட மெசேஜை எடிட் செய்து கொள்ள முடியும்.
யூசர் மெசேஜை எடிட் செய்தால் அதனை ரிசீவர் பார்த்து தெரிந்து கொள்ள ஏதேனும் நோடிபிகேஷன் செட்டிங்ஸ் இருக்குமா என்பதை கூகுள் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கூகுள் vs வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் இந்த கூகுள் குறுஞ்செய்தி செயலி அறிமுகமாக உள்ளது.
பெரும்பாலான மக்கள் வாட்ஸ் அப் அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், கூகுளின் இந்த அதிரடி மாற்றம், வாட்ஸ்அப்பின் பயனர்களை குறைத்துவிடும். இதனை எதிர்பார்த்தே கூகுள் நிறுவனம் இதனை களமிறக்க உள்ளது.
ஏற்கனவே சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டை களமிறக்கி ஏஐ துறையில் மேலோங்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது மெசேஜிங் செயலியிலும் களமிறங்க இருப்பதால் கூகுளின் போட்டியை சமாளிக்க பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தாய் நிறுவனமான மெட்டாவும் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |