கெட்ட கொழுப்பு குறைந்து நீரிழிவு நோயும் நெருங்க கூடாதா? தினமும் 1 பழுத்த தக்காளியை சாப்பிடுங்க...
தினமும் ஒரு பழுத்த தக்காளியை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியும்.
தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்தும். இதனால் அதிகமான உணவுகளை சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும் தக்காளி
தக்காளியை தினசரி சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறையுமாம்.
அது மட்டும் இல்லை, டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கலான வீக்கம், திசு சேதம் போன்ற பிரச்சனைகளையும் இது குறைக்கிறது.