சுகரை ஏற விடாமல் கட்டுக்குள் வைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! ஒரு வேளை சாப்பிட்டால் போதுமாம்
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இது ஏன் என தெரியுமா?
இவற்றை சாப்பிடும் போது மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு தேவையான காபோவைதரேற்று இதில் அதிகம் இருக்கிறது.
இந்த வரிசையில் அடுத்து இடம் பிடிக்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இந்த கிழங்கு குழந்தை முதல் பெரியவர்களை சாப்பிடக் கூடியது.
இந்த கிழங்கில், வைட்டமின்கள் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள், இரும்புச்சத்து, கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
அந்தவகையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
சர்க்கரை நோயாளர்கள் சக்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாமா?
1. சக்கரை நோயாளர்கள் இந்த கிழங்கை சாப்பிட சற்று தயங்குவார்கள். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலுக்கு தேவையான குளூக்கோஸ் இருக்கிறது. இது கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவை குறைக்கிறது. இதனால் தரளமாக சக்கரை வியாதியுள்ளவர் இந்த கிழங்கை சாப்பிடலாம்.
2. சக்கரை வள்ளிக்கிழங்கிலுள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வரவிடாமல் தடுக்கிறது.
3. இந்த கிழங்கில் அதிகமான நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சினை வரவிடாமல் தடுக்கிறது.
4. கரு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தான போலிக் அமிலமானது சக்கரை வள்ளிக்கிழங்கில் அதிகமாக இருப்பதால் இதனை கர்ப்பமாக இருப்பவர்கள் சாப்பிடலாம்.
5. உடல் குறைக்க வேண்டும் என நினைப்பவர் இந்த கிழங்கை காலையுணவாக சாப்பிடலாம், காரணம், இதில் குறைவான கொழுப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
6. கெட்ட கொழுப்பின் தாக்கத்தினால் சிலருக்கு மாரடைப்பு பிரச்சினை ஏற்படும். இந்த நோயினால் உயிருக்கு கூட பிரச்சினை ஏற்படும். இந்த கிழங்கில் வைட்டமின் பி இருப்பதால் இது மாரடைப்பு பிரச்சினை குறைக்கிறது.