வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளின் உடலில் நடக்கும் அற்புதங்கள்!
முளைக்கட்டிய வெந்தயத்திலும் பல்வேறு நன்மைகள் உள்ளன. முளைக்கட்டிய பச்சை பயறில் உள்ளது போலவே முளைக்கட்டிய வெந்தயத்திலும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.
எனவே, அதிக அளவிலான ஊட்டச்சத்து நன்மைகளைப் பெற நீங்கள் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.
நீரிழிவு
முளைத்த வெந்தயம் உங்கள் இரத்த சர்க்கரை அளவில் பல்வேறு அற்புதங்களைச் செய்யும்.
முளைகட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்பட்ட நீரிழிவு நோய் குணமாகும். மேலும், வெந்தயம் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் குளுக்கோஸை மெதுவாக செயல்பட செய்யும்.
இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. வெந்தய விதைகளை 5 நாட்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். அவை முளைகட்டிய வெந்தயமாக உங்களுகுக் கிடைக்கும்.
இதய ஆரோக்கியம்
அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்து உள்ள முளைக்கட்டிய வெந்தயம் இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து சமநிலைப்படுத்துகிறது. அதோடு, கொழுப்பைக் குறைக்கவும், இரத்தத்தில் கொழுப்பு படிவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இதனால் மாரடைப்பு அபாயங்கள் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த
முளைக்கட்டுவதற்கு நாம் வெந்தயத்தை ஊற வைப்பதால் அவை மென்மை அடைகின்றன. இதனால் எளிதாக மற்றும் வேகமாக செரிமானம் நிகழும்.
முளைக்கட்டிய வெந்தயம் கணையத்தில் பீட்டா செல்கள் உருவாவதை மேம்படுத்துகிறது. அமிலத்தன்மை, வாய்வு, வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றை கட்டுப்படுத்த முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நல்லது.