பாத எரிச்சலுக்கு செவ்வாழை யூஸ் தீர்வு கொடுக்குமா?
பல சத்துக்களை உள்ளடக்கிய செவ்வாழையின் யூஸ் குடித்தால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
செவ்வாழை
செவ்வாழையில் வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. அதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது.
நீங்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். 1 சிவப்பு வாழைப்பழத்தில் 1.09 கிராம் அளவிற்கு புரோட்டீன் நிறைந்திருக்கிறது.
நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் இரவில் பாலுடன் செவ்வாழை சாப்பிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும். குடலில் இருக்கும் நல்ல பக்டீறியாவின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தும்.
பாத எரிச்சல், குதிகால் வலி, பாத வலி இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இந்த செவ்வாழை ஒரு சிறப்பு மருந்தாக செயல்படுகின்றது.
இதை இரவு தூங்க செல்வதற்கு முன்பு, முந்திரி, பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த பருப்புகளிலிருந்து தோலை உரித்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் இந்த பருப்புகளை போட்டு, 1 செவ்வாழையை துண்டுகளாக நறுக்கி போட்டு, 4 பேரிச்சம் பழத்தையும் அதனுடன் சேர்த்து, காய்ச்சி ஆற வைக்கப்பட்ட பால் ஊற்றி அரைக்க வேண்டும்.
இப்படி தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் பாதம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.