கிருமி நாசினியாக செயற்படும் கோகம் பழம் பற்றி தெரியுமா?
கோகம் பழத்தில் பக்டீரியாவை எதிர்த்து போராடும் பண்பு அதிகமாகவே உள்ளது.
கோகம் பழத்திலிருக்கும் இந்த பண்பு கிருமி நாசினியாகவும் செயற்படுவதாக கூறப்படுகிறது.
சாப்பிடும் பொழுது ஒரு வகையான குளிர்ச்சி மற்றும் புளிப்பு கலந்த சுவையை உணர்த்தும்.
பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
இவ்வளவு சத்துக்கள் கொண்ட கோகம் பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.
கோகம் பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. கோகம் பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகளை சரிச் செய்வதுடன் இரைப்பை சரியாக வேலை செய்ய வைக்கிறது.
2. உடல் தடிப்புகள் மற்றும் புண்கள் இருப்பின் கோகம் பழம் மருந்தாக செயற்படுகிறது மற்றும் கோகம் பழத்திலிருக்கும் “ஹைபராசிடிட்டி” பூச்சி கடி, ஒவ்வாமை ஆகியவற்றிற்கு தீர்வளிக்கிறது.
3. எடை குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் கோகம் பழச்சாறு தாராளமாக குடிக்கலாம். ஏனெனின் இதிலிருக்கும் ஹைட்ராக்சில் சிட்ரிக் அமிலம் கொழுப்பை குறைத்து உடலை ஒல்லியாக்குகிறது, உடலை உற்சாகமாகவும் வைத்துக் கொள்கிறது.
4. பொதுவாக பழங்கள் புற்றுநோய் பாதிப்பிலிருந்து எம்மை காத்து கொள்ள உதவியாக இருக்கிறது. அந்த வரிசையில் கோகம் பழமும் ஒன்று. இந்த பழத்திலிருக்கும் கார்சினோல் புற்றுநோய்க்கு வழிவமைக்கும் காரணிகளை இல்லாமலாக்குகிறது. அத்துடன் கல்லீரல், கணையம், பெருங்குடல், நாக்கு மற்றும் தோல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
5. கோடைக்காலங்களில் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய பழங்களில் கோகம் பழமும் ஒன்று. இந்த பழத்தை சாப்பிடுவதால் வயிற்று பகுதியிலுள்ள புண்கள் ஆற்றப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |