இரவில் தூங்கும் முன் தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்?
பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் முதியவர்கள் சில விடயங்களை அடிக்கடி கூறுவார்கள்.
ஆனால் இவை கேட்கும் போது நகைப்பாகவும் எறிச்சலாகவும் இருக்கும்.
நாம் மருந்து வில்லைகள் வாங்கி அதனை சாப்பிட்டு சரிச் செய்யக்கூடிய நோய்களை முதியவர்கள் சொல்லும் ஒரு சிறிய டிப் சரிச் செய்து விடுகின்றது.
அந்த வகையில், வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரும் போது தொப்புளில் சில துளிகள் எண்ணெய் விடுமாறு வலியுறுத்துவார்கள்.
இதிலிருக்கும் நன்மைகள் தற்போது இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் என யாருக்கும் பெரிதாக தெரியாது.
தொப்புளில் எண்ணெய் விடுவதால் அப்படி என்ன என்ன நன்மைகள் இருக்கின்றது என தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு மனிதனின் மையப் புள்ளி எனப்படுகின்றது தொப்புள் தான். இந்த தொப்புளிலிருந்து தான் உடலின் நரம்பு மண்டலம் இணைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்?
1. நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த வைத்தியம் முறை கைக் கொடுக்கின்றது.
2. தொப்புளில் பாதாம் எண்ணெய் விட்டு கொண்டு தூங்கினால் சரும பிரச்சினைகள் இருந்தால் அது காலப்போக்கில் சரியாகிவிடும்.
3.தொற்றுகளால் பிரச்சினையிருப்பவர்கள் வேப்பம்எண்ணெய் விடலாம். இவ்வாறு செய்வதால் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறுகின்றது.
4. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சினை இருப்பவர்கள் ஆலிவ் எண்ணெய் இரண்டு துளிகள் தொப்புளில் விட வேண்டும். இவ்வாறு செய்தால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நிவாரணம் கிடைக்கும்.
5. மூட்டு வலி பிரச்சினையிருப்பவர்கள் எள்ளு எண்ணெயை இந்த முறையில் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால் காலப்போக்கில் இந்த பிரச்சினைகள் சரிச் செய்யப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |