பப்பாளி பழ விதையில் இருக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? தெரிந்தால் தூக்கி எறிய மாட்டீர்கள்!
பொதுவாகவே சில பழங்களை சாப்பிட்டால் அதினுள் இருக்கும் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம் அவ்வாறு தூக்கி எறியும் பழ விதைகளில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது தெரியுமா? தெரிந்தால் அவற்றை இனி எறியவே மாட்டீர்கள்.
அதேபோல் நீங்கள் சாப்பிட்டு விட்டு தூக்கிப் போடும் பப்பாளி பழத்திலும் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டு.
பப்பாளிபழ விதை
ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் பப்பாளி பழமும் ஒன்றாகும். பப்பாளி பழ விதையில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது.
மேலும் உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், துத்தநாகம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் போன்ற விட்டமின்கள் போன்ற நன்மைகள் இருக்கின்றன.
நன்மைகள்
1. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்
2. வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவும்
3. உடல் பருமனை கட்டுக்குள் வைக்க உதவும்
4. குடலில் உள்ள புழுக்கள், பக்ரீரியாக்களை அழிக்கும்
5. மலச்சிக்கலைத் தடுக்கும்
6.குடல் இயக்கத்தை மேம்படுத்தும்
7. உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்
8. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
9. புற்றுநோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்
10. மாதவிடாய் வலியைக் குறைக்கும்
11.ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக்கி உடலை பேணும்