இடுப்பை சுத்தி ரொம்ப நிறைய கொழுப்பு தேங்கியிருக்கா.. இதை மட்டும் சாப்பிடுங்க போதும்!
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்தால் இடுப்பை சுத்தி இருக்கும் கொழுப்பு கரையும்.
இன்று ஆரோக்கியம் நிறைந்த முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவு.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை - 1 கப்
- வாழைத்தண்டு - சிறிய துண்டு
- வெங்காயம் - 1
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- சிகப்பு மிளகாய் - 1
- கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
செய்முறை
முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.
வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.