பச்சை மிளகாய் வலியை போக்குமா? இதன் அறிவியல் பற்றி தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் பச்சை மிளகாய். இது சமையலில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.
பச்சை மிளகாய் பரவலாக சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள பெரியவர்கள் காயம் ஏற்பட்டவர்களுக்கு அதிகளவில் பச்சை மிளகாய் கொடுப்பதை அவதானித்திருப்போம்.
பச்சை மிளகாய் வலியை போக்குமா?
இதில் வலியை போக்கும் தன்மை காணப்படுவதற்கு என்ன காரணம் மற்றும் பச்சை மிளகாயின் அலப்பரிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கை வலி நிவாரணி பச்சை மிளகாயின் காரத்திற்கு காரணமான கேப்ளிசின் எனும் வேதிப்பொருள் ஒரு இயற்கை வலி நிவாரணியாகும் இதில் இருந்தே வாதம் மற்றும் தசை வலிகளுக்கு பயன்படுத்தப்படும் களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.
பச்சை மிளகாயில் காணப்படும் கேப்ளிசின் காரணமாகவே இது வலியை போக்குவதாக அறிவியல் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றது.
இது முகப்பரு வருவதை தடுப்பதுடன் சர்மத்தை எப்போதும் இளமையான வைத்திருக்க உதவுகின்றது. பச்சை மிளகாயில் வைட்டமின்- சி அதிகளவில் காணப்படுவதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
இதில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் கேப்சைசின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க துனைபுரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |