மன்சூர் அலிகான் சர்ச்சையில்.. பல்டி அடித்த த்ரிஷா! குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம் தொடர்பாக, த்ரிஷாவிடம் பொலிஸார் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில், நடிகை த்ரிஷா இதற்கு யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன்சூர் அலிகான்-த்ரிஷா சர்சை
அடிக்கடி ஏதேனும் சச்சையான விஷயங்களை பேசி சிக்கிக் கொள்ளும் நடிகர் மன்சூர் அலிகான், 'லியோ' படத்தில் தனக்கும், த்ரிஷாவுக்கும் ஒரு காட்சி கூட இல்லை என்கிற ஆதங்கத்தை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இது குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. மன்சூர் அலிகான் முழு வீடியோவையும் வெளியிடாமல், அவர் பேசிய சர்ச்சை விஷயங்களை கட் செய்து மர்ம நபர் ஒருவர் வெளியிட்ட குறித்த வீடியோவிட்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் பாரதிராஜா, போன்ற பல த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு பதில் அளித்தார்.
நடிகர் சங்கம் இந்த பேட்டி குறித்து தன்னிடம் விளக்கம் கேட்காமல் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்பது போல் தெரிவித்தார். மேலும் தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட்டு, அழுத்தம் கொடுத்ததன் பேரில் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்துமன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்த மறுதினமே நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கையில், மன்னித்துவிடு என கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பின்னர் இந்த அறிக்கையில் மரணித்துவிடு என்கிற வார்த்தைக்கு பதிலாக மன்னித்துவிடு என்கிற வார்த்தை இடம் பெற்று விட்டதாக கூறி, அதற்கு விளக்கம் ஒன்றையும் கொடுத்து அறிக்கை வெளியிட்டார்.
த்ரிஷாவின் பதில்
தற்போது வரை முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனை குறித்து, நடிகை த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் இதற்கான பதிலை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பதில் கடிதத்தில் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என காவல் துறையிடம் த்ரிஷா கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான் கடும் சீற்றத்தில் இருந்த த்ரிஷா அவ்வாறு மாற்றி பேசியதன் காரணம், அவர் உண்மையான வீடியோவை பார்த்து, மன்சூர் மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டதாலா? அல்லது பயந்து விட்டாரா என இணையதளவாசிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர். குறித்த விடயம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |