தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இந்த நோய்கள் கிட்டகூட நெருங்காது!
நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி கால்சியம் இரும்புச்சத்து பாஸ்பரஸ் நார்ச்சத்து புரதம் போன்ற ஏகப்பட்ட சத்து வகைகள் காணப்படுகின்றன.
இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகின்றன. நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
இந்த காய் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கி நோய்கள் வருவதை தடுக்கிறது. நெல்லிக்காயால் மனிதகுலத்திற்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நெல்லிக்காய்
1. ஆஸ்துமா உள்ளவர்கள் நெல்லிக்காயின் சாற்றை வேறாக எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் நீங்கும்.
இந்த காயில் ஆன்டிஆக்சிஜன்கள் நிறைவாக உள்ளதால் புற்றுநோயை தொடக்கத்திலே விரட்டும். ரத்த சோகை உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்படுவதால் அவர்களுக்கு இதில் உள்ள இரும்புச்சத்து அப்படியே கிடைக்கும்.
2.காலை எழுந்ததும் வெறும்வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் முடி உதிரும் பிரச்சனை இருக்காது, இதற்கு எதிராக முடி வளர்ச்சி அடையும்.
தலையில் பொடுகு தொல்லை என்பது வராது. இதில் கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் நரைமுடியை தடுக்கும் குணம் இதற்கு உண்டு.
3.நீரழிவு நோயாளர்களுக்கு இன்சுலின் உற்பத்தி செய்வதில் இந்த காய் பெரும் பங்கு செய்கின்றது. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவையும் உயர் குருதி அழுத்தத்தையும் இது கட்டுக்குள் வைத்திருக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தாராளமாக நெல்லிக்காய் சாப்பிடலாம். உடலின் செரிமான மண்டலத்தை இது சீராக வைத்திருக்க உதவும்.
4.தினமும் ஒன்று அல்லது அதற்கு மேல் நெல்லிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனை இருக்காது. உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால் இது அடியோடு வெளியேற்றும்.
நெல்லிக்காய் சாப்பிடும் அதிஸ்டசாலிகளுக்கு முதுமையான தோற்றம் எளிதில் வராது. இந்த காய் சருமத்தை பளபளப்பாக வைக்கும்.