முடி உதிர்வை தடுக்க உதவும் சூறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், குறைந்த விலையில் கிடைக்கும் சூரை மீன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சூரை மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

சூரை மீனில் அதிகளவு புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, நியாசின், செலினியம், வைட்டமின் பி6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
அதாவது, 85 கிராம் சூரை மீனில் சுமார் 21 கிராம் புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.
சூரை மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
மேலும், நியாசின் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவக்கூடும் என்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவக்கூடும் என கூறப்படுகிறது.
வஞ்சிரம் போன்ற விலை உயர்ந்த மீன்களுடன் ஒப்பிடும்போது, சூரை மீன் குறைந்த விலையில் கிடைக்கிறது.