அட்டகாசமான மருத்துவ பலன்கள்.. வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பொதுவாக வேப்பம் இலைகள் மிகவும் கசப்பாக இருப்பதால் அதிகமானவர்கள் விரும்புவதில்லை.
ஆனால் வேப்பம் இலைகள் எவ்வளவு கசப்பாக இருக்கின்றதோ அந்தளவு மருத்துவ குணங்கள் அதில் இருக்கின்றன.
இதனை அறிந்த எமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக இதை உணவாகவும், மருந்துகளாகவும் வேப்பம் இலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய கசப்பான வேப்பம் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. குடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகின்றது.
தற்போது இருக்கும் நவீன உலகில் துரித உணவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி சில குடல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது வேப்ப இலைகளை சாப்பிடலாம்.
2. கல்லீரல் ஆரோக்கியம்.
வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வதும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். அழற்சி எதிர்ப்பு பண்புகள் வேப்பம் இலைகளில் அதிகமாக இருக்கின்றன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் கல்லீரல் திசுக்களில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது.
3. இரத்தச் சர்க்கரையை கட்டுபடுத்தும்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இந்த கசப்பான வேப்பம் இலைகளை தாராளமாக எடுத்து கொள்ளலாம். ஏனெனின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும் ஆற்றல் வேப்பம் இலைகளுக்கு உள்ளன.
4. மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
ஆரோக்கியமற்ற உணவுகளினால் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு வேப்பம் இலைகள் நிவாரணம் அளிக்கின்றன. அத்துடன் வேப்ப இலைகளில் நார்ச்சத்து உள்ளது, இது வயிற்றை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் வீக்கம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
முக்கிய குறிப்பு
வேப்பம் இலைகளில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் இருக்கின்றமையினால் அளவிற்கு அதிகமான வேப்பம் இலைகளை எடுத்து கொள்வதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |