வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
காலை எழுந்ததும் சிலர் வெறும் வயிற்றில் டீ, காபி இவற்றுடன் பிஸ்கட் எடுத்துக்கொள்வதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிட்டால்
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் காலையிலேயே சாப்பிடும் பிஸ்கட் செரிமான பிரச்சினையை உண்டாக்கும்.
பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின் உயர் கிளைசெமிக் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும்.
உப்பு சேர்க்கப்பட்ட குக்கீகள் உங்கள் இரத்த அழுத்த அளவை உயர்த்தும் திறன் கொண்டவை.
வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்.
பச்சை மாவு பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் குக்கீகள் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த பிஸ்கட்டுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு பின்பு 15 நிமிடங்கள் கழித்த பின்பே மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.