தினம் ஒரு கொய்யா சாப்பிட்டால்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது
வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக கிடைக்கும் கொய்யா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக காணப்படுகின்றது.
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.
கொய்யா செடியின் சதைப்பற்றுள்ள பழங்கள் மற்றும் இலைகள் இரண்டும் உண்ணக்கூடியவை, பழங்கள் பெரும்பாலும் சிற்றுண்டியாகவும், இலைகளை பொதுவாக மூலிகை தேநீராகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கொய்யாவின் மருத்துவ குணங்கள்
கொய்யாவில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சுப் பழத்தை விட வைட்டமின் சி அதிகமாக இருப்பது மட்டுமின்றி, கொய்யாவில் மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது.
கொய்யாவில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று நார்ச்சத்து. நார்ச்சத்து மலத்தை திடப்படுத்துதல் மற்றும் மென்மையாக்குவதன் மூலம் செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் எளிதாக சீர்செய்யக்கூடியது.
கொய்யா பழத்தை போலவே அவற்றில் இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதன் இலை புற்று நோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்டுள்ளது. எனவே கொய்யா சாறு புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் கட்டுப்படுத்துவதில்பெரும் பங்கு வகிக்கின்றது.
கொய்யா இலை சாறு வயிற்றுப்போக்கின் தீவிரத்தையும் கால அளவையும் குறைக்க உதவும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறிப்பட்டுள்ளது.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உட்பட சில செரிமான கோளாறுகள் உள்ளவர்கள், தினசரி ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவதால் சிறந்த தீர்வை பெறலாம்.
மாதவிடாய் வலி உள்ள பெண்கள் கொய்யா இலையை மாதவிடாய் காலப்படுகுதியில் சாப்பிடுவது இயற்கை முறையில் வலியை குறைக்க துணைப்புரியும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்ச்சி செய்பவர்கள் தினசரி உணவில் கொய்யாவை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது அதிக நேரம் நிறைவாக உணர்வை கொடுப்பதன் காரணமாக பசியை கட்டுப்படுத்த உதவும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த விளைவு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். உணவுக்குப் பிறகு கொய்யா இலை தேநீர் அருந்துவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், கொய்யா வேர்கள் மற்றும் கொய்யா இலைகளை வெட்டி 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
தினசரி ஒரு கொய்யாவை சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெரும். இதனால் நோய்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
தினம் ஒரு கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்படலாம். ஏனெனில் கொய்யா பழம் அமில தன்மை நீக்க உதவும். எனவே, கொய்யா பழத்தை சாப்பிட்டால் வாயுவை வெளியேற்றம் எளிதாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |