இந்த பொருட்களை கடனாக கொடுக்கவே கூடாது... மீறினால் வறுமை ஏற்படும்!
இந்து சாஸ்திரத்தில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை சரிவர பின்பற்றியதன் காரணமாகவே நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்.
சாஸ்திரங்களின் அடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் வீட்டில் விளக்கேற்றிவிட வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது. இதன் பின்னர் யாருக்கும் கடன் கொடுக் கூடாது என்பது ஐதீகம்.
மீறி கொடுத்தால் வீட்டில் செல்வசெழிப்பு இருக்காது எனவும் பணப்பற்றாக்குறை ஏற்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அப்படி தவறியும் கடனாக கொடுக்க கூடாத பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடனாக கொடுக்க கூடாத பொருட்கள்
வீட்டில் இருக்கும் அரிசியை பக்கத்து வீட்டினருக்கு தானமாக கொடுத்தால் வீட்டிலுள்ள மகிழ்ச்சி அவர்களுடன் போய்விடும் என்று நம்பப்படுகின்றது.மேலும் சுக்கிரதோஷம் ஏற்பட்டு வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.
சனி பகவானுக்கு தொடர்புடையதாக கருதப்படும் எள், கடுகு, எண்ணெய் இவற்றினையும் யாருக்கும் கடனாக கொடுக்கக்கூடாது. அதிலும் சனிக்கிழமை அன்று கொடுக்கவே கூடாது. ஏனெனில் சனிக்கிழமை சனிபகவானுக்கு உகந்த நாளாகும்.
இதே போல பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் யாருக்கும் கடனாக கொடுக்கக்கூடாது. வியாழன் கிரகத்துடன் தொடர்புடைய மஞ்சளையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்கக்கூடாது. இதனால் குரு தோஷம் ஏற்பட்டு நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
பூண்டு, வெங்காயமும் கேதுவுடன் தொடர்புடையது என்பதால், அதனை கடனாக கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள செழிப்பு மகிழ்ச்சி என்பன அவர்களுடன் சென்றுவிடும்.
உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதால், உப்பு லட்சுமி தேவியின் உருவமாகவே பார்க்கப்படுகின்றது. அதனை மற்றவர்கயுளுக்கு கடனாக ஒருபோதும் கொடுத்துவிட கூடாது. இதனால் பாரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
துடைப்பமும் மகாலட்சுமிக்கு உகந்த பொருள் என்பதால் அதனை கடனாக கொடுப்பது லட்சுமிக்கு கோபத்தை உண்டாக்கும். அதனால் வீட்டில் பணகஷ்டம் ஏற்படும்.
நாம் பயன்படுத்திய செருப்பு, துணிமணிகள், பூஜை பொருட்களை என்பவற்றை ஒருபோதும் கடனாக கொடுக்க கூடாது. இது பெரும் துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |