குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா? சுவாச நோயுள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக இயற்கையாகவே அதிக இனிப்புச் சுவை கொண்ட பழங்களில் பேரிச்சம் பழமும் ஒன்று.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
“சூப்பர் ஃபுட்ஸ்” என அழைக்கப்படும் பேரிச்சம் பழத்தை குளிர்காலத்தில் எல்லோரும் சாப்பிட வேண்டிய ஒன்று கூட சொல்லலாம்.
அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
பேரீட்சைபழத்தை சாப்பிடுவதால் அப்படி என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதனை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
பேரீட்சைபழம்
2024 சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
1. குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்து கொள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்வது அவசியம். இப்படியான நேரங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை பேரீட்சைபழம் அதிகரிக்க வைக்கின்றது.
2. பேரிச்சை பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இது எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
3. குளிர்காலத்தில் கால், கைகள் விரைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள் இப்படியானவர்களை கையாள்வது மிக கடினமாக இருக்கும். இப்படியான நேரங்களில் உடல் சூட்டை பேரீட்சை பழம் தக்க வைத்து கொள்கின்றது.
4. பேரீட்சை பழம் சாப்பிடுவதால் சோர்வு, சோம்பல் இவை இரண்டையும் விரட்டி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றது. ஏனெனின் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ், ப்ரக்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
5. குளிர்காலத்தில் டயட்டில் சேர்த்துக் கொள்ளும் போது, ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து அனீமியாவைத் தடுக்கும் ஆற்றல் பேரீட்சை பழத்திற்கு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |