தினமும் காலையில் ஒரு கப் சீரக தண்ணீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
மருத்துவ மூலிகையாநா சீரகம் வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது.
சீரகத்தில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன.
சீரக தண்ணீர் ஒரு சிறந்த இயற்கை பானமாகும். தினமும் காலையில் சீரக தண்ணீரை குடிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
அந்தவகையில், தினமும் காலையில் ஒரு கப் சீரக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்- சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
செரிமானத்தை மேம்படுத்தும்- சீரகத் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்த உதவும். அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும்.
அழற்சியைக் குறைக்க உதவும்- சீரகத்தில் உள்ள சில இயற்கை சேர்மங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும்.
வயிற்று வலி மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகளைக் குறைக்கவும் இது உதவும்.
மாதவிடாய் சுழற்சிக்கு உதவும்- சீரகத் தண்ணீர் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்திருக்க உதவும்.
சரும ஆரோக்கியத்திற்கு நல்லது- சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவும். இது சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கவும், முன்கூட்டிய வயதான தோற்றத்தைத் தடுக்கவும் உதவும்.
முகப்பருவை குறைக்க உதவும்- சீரகத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். இதனால் முகப்பரு பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது.

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்- சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவும். மேலும், சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும்.
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்- சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். மேலும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்- சீரகத் தண்ணீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். ஆனால், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் சீரகத்தை அதிகமாக உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
இரத்த சோகையைத் தடுக்க உதவும்- சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. இதனால், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்துவதில் சீரகம் உதவக்கூடும்.