மரியாதையா? அப்படினா?.. வந்த முதல் நாளே கிழித்து தொங்க விட்ட மாயா!
வந்த முதல் நாளே மாயா அரச்சனாவை அழ வைத்து வேடிக்கை பார்த்துள்ளார்.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தற்போது சீசன் 7 நடந்து வருகிறது.
100 நாட்களுக்கு மேல் இந்த வீட்டில் யார் தங்குகிறார்களோ மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் வந்தனர். இவர்களில் வாரத்திற்கு ஒருவர் வீதம் வெளியேற்றப்படுவார்கள்.
அந்த வகையில் தற்போது 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டு வெளியேறியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக வைல்ட் கார்ட் வாயிலாக 5 போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ளார்.
கலாய்த்து தள்ளிய மாயா
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக சென்ற அர்ச்சனா, பிரவ், தினேஷ், பாலா உள்ளிட்டோர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் சரியாக வரவேற்கப்படவில்லை என பிரச்சினை வெடித்து கொண்டிருக்கின்றது.
இதில் மாயா, அர்ச்சனா கொஞ்சம் கலாய்க்கும் வகையில் பேசுகிறார்.
இந்த விடயம் அங்கிருந்தவர்களையும் தாண்டி அர்ச்சனாவை பாதித்துள்ளது. இதனால் அழுதுக் கொண்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் சென்று விடுகிறார்.
பின்னர் பூர்ணிமா,விச்சி மா சென்று சமாதானம் செய்து அழைத்து வருகின்றார்கள். தலைவராக கடமையை பூர்ணிமா சரிவரச் செய்கிறார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் போட்டியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு செவி சாய்க்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |