கறிவேப்பிலை பக்கவிளைவையும் ஏற்படுத்துமாம்... உங்களுக்கு தெரியுமா?
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை
பொதுவாக இந்திய சமையலறைகளில் கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஆம் சமைக்கும் உணவிற்கு மணத்தினையும், சுவையை சேர்க்கும் கறிவேப்பிலையை நம்மில் பெரும்பாலானோர் ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.
இதில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம் இவைகள் நிறைந்து காணப்படுகின்றது.
நன்மைகள் என்ன?
கறிவேப்பிலை ரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கும், கண்பார்வையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றது.
மேலும் பசியின்மை பிரச்சனையை சரிசெய்வதுடன், செரிமான பிரச்சனை, வயிறு பிரச்சனையையும் சரி செய்கின்றது.
மேலும் நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலை காலை, மாலை இரண்டு 10 இலைகள் வீதம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம்.
அதுமட்டுமின்றி உடல்எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
கறிவேப்பிலை அரைத்து, எலுமிச்சம்பழ சாறு மற்றும் தயிர் சேர்த்து வெறும்வயிற்றில் மூன்று நாட்கள் குடித்தால் சீதபேசி குணமாகுமாம்.
பக்கவிளைவுகள் என்ன?
கறிவேப்பிலையில் காணப்படும் ஆல்கலாய்டு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமாம். மத்திய நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கின்றது.
சிலருக்கு கறிவேப்பிலை சாப்பிட்டால் சுவாச பிரச்சனை, சரும பிரச்சனை, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
அளவுக்கு உட்கொண்டால் வயிறு சம்மந்தமாக பிரச்சனையை ஏற்படுத்துமாம். சில தருணங்களில் உடம்பில் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும் செய்யும்.
குறைந்த ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் கறிவேப்பிலை சாப்பிட்டால் மேலும் சர்க்கரை அளவு குறைந்து பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதிலுள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரகத்தில் கல் உருவாக முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
தினமும் 10 முதல் 15 இலைகள் உட்கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. ஆனால் அலர்ஜி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் கலந்தலோசித்து சாப்பிடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
