வெதுவெதுப்பான நீர் குடித்து நாளை தொடங்கினால் கிடைக்கும் நன்மை என்ன?
தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை தரும். அதிகமான தண்ணீரை குடிக்கும் போது எமது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். ஈனால் அதிகமானோர் குளிர்ந்த ீரையே குடிக்க விரும்புவார்கள்.
இது உடல் நலத்திற்கு நன்மையை தந்தாலும் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் போது அது மேலும் நன்மை தருகின்றது. இத காலையில் வெறுவயிற்றில் குடிக்கும் போது இதனால் நீரழிவைத் தடுக்கவும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவும்.
இந்த பதிவில் சாதாரண தண்ணீரை விட்டு வெதுவெதுப்பான நீர் குடித்து ஒரு நாளை தொடங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும்.
வெதுவெதுப்பான நீர்
உமது உடல் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். தினமும் காலை எழுந்தவுடன் முதல் விஷயமாக வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கிடைக்கும். உடலில் வாயு செரிமானப்பிரச்சனைகளில் இருப்பவர்கள் கட்டாயமாக காலையில் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.
இது குடல் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இது உணவை வாயிலிருந்து உணவுக்குழாய், வயிறு, சிறு மற்றும் பெரு குடல்கள் மூலம் எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
சீரான உடல் வெப்பநிலை
வெதுவெதுப்பான நீர், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணம் ஒரு வாசோடைலேட்டர் ஆகும். அதாவது இது இரத்த நாளங்களைத் திறந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
வழக்கமான உடல் வெப்பநிலையை 98.6 டிகிரி பாரன்ஹீட் அல்லது 37 டிகிரி செல்சியஸ் வரை பராமரிப்பது சிறந்தது. உடல் வியர்வை நாளங்களை திறந்து நரம்புகளை செயல்பட செய்கிறது.
நச்சு வெளியேற்றுதல்
காலையில் வெதுவெதுப்பான நீர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அப்பாற்பட்ட நன்மைகளைக் கொண்டுள்ளது. குடல் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம், இது உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை அகற்ற உதவும். இவ்வாறாக உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்படுவதால், தோல் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
நீரேற்றம்
உடலுக்கு போதுமான அளவு நீர் கிடைக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும், மேலும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும்.
நன்கு தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருப்பது ஊட்டச்சத்து பெறுதல், உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் மனத் தெளிவு போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |