கடகடன்னு தொப்பை குறையணுமா? அப்போ வெள்ளரிக்காய் இருந்தா போதும்
வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறிகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும்.
இப்படி ஆரோக்கியதிற்கு அளப்பரிய நன்மை பயக்கும் வெள்ளரிக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளரிக்காயின் நன்மைகள்
வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் கோடைகாலத்தில் சிறந்த உணவுகளாக மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தீர்வாகவும் காணப்படுகின்றது.
தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தொப்பை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. தினசரி உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
வெள்ளரிக்காயில் வைட்டமின்- சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும், இதில் எடை இழப்புக்கு உதவும் பிற பண்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெள்ளரிக்காயின் கலோரி குறைவாக இருப்பதால் உடற்பருமனாக இருப்பவர்கள் தொடர்ச்சியாக தினசரி உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் எடையை விரைவாக குறைக்க துணைப்புரியும்.
ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காய் சாப்பிடுவது வைட்டமின் கே இன் தினசரி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்கு வழங்குகிறது.
இது இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது. மேலும் உங்கள் எலும்பு, முடி மற்றும் சருமத்தை வலுவாக வைத்திருக்கும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
வெள்ளரிக்காயின் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. வெள்ளரிக்காய் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் உதவக்கூடியது.
எனவே நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் இதனை சேர்த்துக்கொள்வது நல்லது. வெள்ளரிக்காய் சாப்பிடுவது உங்களை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்கும்.இதனால் உடல் எடையை குறைப்பதற்கு இதை விட சிறந்த தெரிவு இருக்க முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |