நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் புளி : இனிமேல் தவிர்க்காதீர்கள்
அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் தான் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் அளப்பரிய ஊட்டச்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் நிறைந்து காணப்படுகின்றது.
புளியில் வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன.
நமது உணவிவை ருசியாக்கும் புளியின் புளிப்பு சுவை பலருக்கும் பிடித்தமானது. புளி சாதம் என்றாலே வாயில் எச்சில் ஊறும்.
உணவின் ருசியைக் அதிகரிக்கும் புளி, ஆரோக்கியத்திற்கு எந்தளவு துணைபுரிகின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
புளி தரும் ஆரோக்கிய பயன்கள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை புளியில் ஏராளமாக உள்ளன.புளியில் ஹைட்ரோசிட்ரிக் அமிலம் இருப்பதால், புளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் கொழுப்பு விரைவாக குறையும்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் புளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த தீர்வு கொடுக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் புளி உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கொண்டது புளி.
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி பலப்படுத்தும் உணவுப் பொருட்களில் புளிக்கும் முக்கிய இடம் உண்டு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |