7 கிராம்பு மட்டும் போதும்: இத்தனை நோய்களுக்கு மருந்தா?
கிராம்பு (Clove) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
கிராம்பு தேநீர் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரான ரத்த ஓட்டம், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கிராம்பு தேநீர் செய்முறை
1 கப் நீருடன், 7 கிராம்பை கொதிக்கவைத்து 2 நிமிடங்கள் கழித்து பருகலாம் . தேயிலை சேர்த்து குடிக்க விரும்புபவர்கள் கூடவே தேயிலை மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
பயன்கள்
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் 1 கப் கிராம்பு டீ செய்வது குடிப்பதால் கிடைக்கும். இதனுடன் சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்வது நல்லது.
தலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை மிதமான சூட்டில் குடிப்பது மிகவும் நல்லது!
கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எலும்பில் உள்ள எனாமல் தேயாமல் பாதுகாக்கின்றது. முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானத்தை கிராம்பு சரிசெய்கின்றது.
கிராம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது வயிற்றில் இருக்கும் புண்களை சரிசெய்ய உதவுகின்றது. வயிற்று அல்சர் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும்.
கிராம்பில் இருக்கும் பினைல்புரப்போனைடு என்கிற வேதிப்பொருள் உடலின் புற்றுநோய் பாதித்த உடல் செல்களை மீண்டும் வளர்ச்சி பெறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுவோர் கிராம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். நாம் சாப்பிடுடம் சாப்பாட்டை செரிமானம் செய்வதுடன் வயிற்றையும் சுத்தம் செய்யவும் உதவுகிறது.
கிராம்பை வாங்கும் போது இதை கவனியுங்கள்
கிராம்பு வாங்கும்போது பெரிய கிராம்புகளை தேர்ந்தெடுங்கள். அதாவது நீங்கள் தலையையும் தண்டுகளையும் தெளிவாக பார்க்கும் வகையில் வாங்குங்கள்.
பின்னர் அவற்றின் நிறத்தைப் பாருங்கள். அவை சிவப்பு-பழுப்பு நிறமாக இருந்தால், நன்றாக இருக்கின்றன என்று அர்த்தம். இது தவிர, மொட்டின் நான்கு இதழ்கள் மற்றும் அவற்றின் உள்ளே இருக்கும் மகரந்தங்களை நீங்கள் அடையாளம் காண முடியும்.
சிறிய குச்சிகளைப் போல இருக்கும் கிராம்புகளை வாங்க வேண்டாம், ஏனெனில் அவை வெறும் தண்டுகள். காற்று புகாத சேமித்து, ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து விலகி இருந்தால் ஒரு வருடம் கூட கிராம்பு கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.