யூரிக்அமில பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்ககுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க
தொண்டு தொற்று பயன்பாட்டில் இருக்கும் வெற்றிலை, மருத்துவ குணம் கொண்ட பொருள் மட்டுமல்ல, மங்களகரமானதும் கூட.
பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு மற்றும் உடன் உணவுகள் மீது ஏற்பட்டுள்ள மோகம் மற்றும் அதன் சுவைக்கு அடிமையாகியுள்ள காரணங்களினால் நம்மில் பலரும் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்துவது அரிதாகிவிட்டது.
இதனால் பல்வேறு நோய் அபாயங்களும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் பல்வேறு நோய்களுக்கு அரும்மருந்தாக இருக்கும் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிலை சாப்பிடுவதன் நன்மைகள்
தற்காலத்தில் முறையற்ற உணவுப்பழக்கத்தால் யூரிக் அமில பிரச்சினை வயது வித்தியாசமின்றி தாக்கம் செலுத்துகின்றது. யூரிக் அமிலம் எனப்படுவது இரத்தத்தில் காணப்படும் ஒரு அழுக்கு கொருளாகும்.
அதன் அளவை உடவில் அதிகரிப்பது மருத்துவ மொழியில் ’ஹைப்பர்யூரிசிமியா’ என குறிப்பிடப்படுகின்றது.
அவ்வாற யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பதால் மூட்டுவலி சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதாவது யூரிக் அமிலம் நீண்ட காலமாக உடலில் குவிந்து, திடப்பொருள்கள் குவிந்து சிறுநீரகத்தில் கல்லாகவும் உருவாகிறது.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியங்கள் சில உள்ளன. அந்த வகையில் வெற்றிலை யூரிக் அமிலத்தை கட்டுபடுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
வெற்றிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுவதனால். இது மூட்டு வலிக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது.
வெற்றிலையில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது வாயில் உள்ள பல பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது.அதனால் சுவாச துர்நாற்றத்தை போக்க வெற்றிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
உணவுக்கு பின்னர் ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய் தொற்று ஆகியவற்றிலிருந்தும் உடனடி தீர்வை வழங்குகின்றது.
நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறன் வெற்றிலையில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக டைப் 2 நீரிழிவுக்கு வெற்றிலை அரும்மருந்தாக காணப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் வெற்றிலை சாப்பிடுவதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
ஆனால் வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து சாப்பிடுவது புற்றுநோய் போன்ற அபாயகரமான உயிர்கொல்லி நோய்களுக்கு காரணமாகிவிடும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |