பாலக் கீரை வாசம் பட்டாலே ஓடுபவரா நீங்க? அப்போ இந்த தப்ப இனி பண்ணாதீங்க!
பொதுவாக தற்போது இருப்பவர்களின் பெறும் பிரச்சினையாக எடை அதிகரிப்பு பார்க்கப்படுகின்றது.
குளிர்காலம் தொடங்கி விட்டதால், எடை இழப்பு டயட்டில் புதிய உணவுகளை சேர்க்க வேண்டிய நேரம் இது.
பச்சை இலைக் காய்கறிகள் அனைவருக்கும் பிடித்தமானவை அல்ல, ஆனால் இது போன்ற உணவுகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன.
அந்த வகையில், பாலக் கீரை ஒரு இலை பச்சை காய்கறியாகும், இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
இந்த கீரை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பாலக் கீரை ஏன் சாப்பிட வேண்டும்?
1. பாலக் கீரையில் வைட்டமின் சி சத்து அதிகமாகவுள்ளது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கின்றது.வெள்ளை இரத்த அணுக்களை அதிகமாக உருவாக்கி உடலை வலுப்படுத்துகின்றது.
2. உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வது மிக அவசியம். இதனால் பாலக் கீரையை வாரத்திற்கு இரண்டு தடவைகள் சரி எடுத்து கொள்ளலாம். இரும்பு சத்து குறைப்பாட்டினால் ஏற்படும் சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றை இது சரிச் செய்கின்றது.
3. பாலக் வைட்டமின் கே மற்றும் கால்சியத்தின் வைத்துள்ளது. இதனால் எலும்புகள் வலு இழந்தவர்கள் இந்த கீரையை சாப்பிடலாம்.
4. புற்றுநோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவியாக இருக்கின்றது.
5. பாலக் நார்ச்சத்து பெயர் போன கீரைகளை ஒன்று. இதனால் செரிமான சரியாக நடக்கும். குடல் இயக்கத்தை சீர்ப்படுத்தி மலச்சிக்கலை தடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |