மாம்பழ விதையை இனி வீசாதீங்க.. இந்த Secret Benefits உங்களை ஆச்சரியப்படுத்தும்!
வழக்கமாக கோடைக்காலங்களில் அதிகமாக மாம்பழங்களை சந்தையில் பார்க்கலாம். ஏனெனின் இந்த காலப்பகுதியில் அதிகமான விளைச்சலை மாம்பழங்கள் தரும்.
மாம்பழத்தை சாப்பிடும் ஒருவருக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். அதே போன்று அதிலுள்ள விதைகளிலும் உள்ளதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாம்பழத்தை சாப்பிட்ட பின்னர் அதிலுள்ள கொட்டைகளை தூக்கி எறியாமல் பயன்படுத்தினால் பெண்களுக்க தேவையான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். அத்துடன் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றும் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
மாம்பழ விதைகளில் இருந்து பலன்களை பெற நினைப்பவர்கள் மாங்காய் விதையை நன்கு காய வைத்து உலர்த்தி, பின் அதை அரைத்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
அந்த வகையில், மாம்பழ விதைகளில் வேறு என்னென்ன பலன்கள் உள்ளன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மாம்பழ விதைகளால் கிடைக்கும் நன்மைகள்
1. மாம்பழம் விதைப் பொடியாக்கி, தயிர் மற்றும் உப்புடன் கலந்து சாப்பிடுவது மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கை குறைக்கும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதால் சிறந்த தீர்வை பெறலாம்.
2. மாங்காய் விதை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும். இரத்த சர்க்கரையை குறைப்பதில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது.
3. மாங்காய் விதைகள், வில்வ விதைகள் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து, ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி, மூன்று முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு சரியாகும். வயிற்றுப்போக்கில் இரத்தம் இருப்பின், மாங்காய் விதைகளை அரைத்து மோரில் கலந்தும் குடிக்கலாம்.
4. பச்சை மா இலைகளை உலர்த்தி, பொடியாக்கப்பட்ட மாங்காய் விதைகளை சேர்த்து இரண்டையும் கலந்து வடிகட்டி எடுக்கவும். தினமும் பல் துலக்கும் பொழுது வெண்மையாகவும், வலுவாகவும் இருக்கும். பல் வலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இதுவும் சிறந்த தீர்வாக இருக்கும். மா இலைகளை சிறிது நேரம் மென்று தினமும் துப்பினால் பற்கள் நடுங்குவது நின்று, ஈறுகளில் வரும் இரத்த கசிவு பிரச்சினையும் சரியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |