வாரத்தில் 2 முறை போடுங்க- தலைமுடி கருகருன்னு அடர்த்தியாக வளரும்
தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தலைமுடி எப்போதும் ஒல்லியாகவே உள்ளது என பலரும் கவலையுடன் இருப்பீர்கள், ஆனால் ஒரு தீர்வு உள்ளது.
தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டுள்ள பொருட்களை இயற்கையாக ஹேர் மாஸ்க் செய்து போடலாம்.
இப்படி இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. அதே சமயம் உங்களின் தலைமுடியும் வலுவாக இருக்கும்.
முக்கியமாக தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்று, முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
அந்த வகையில், தலைமுடியை அடர்த்தியாக வளரத் தூண்டும் ஒருசில இயற்கை ஹேர் மாஸ்க் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழம் -1
- தேன் - 2 டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் ஆயில் - தலைக்கு தேவையானளவு
- முட்டை - 1
பேக் தயாரிப்பு முறை
முதலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதன் தோக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
வாழைப்பழம் நன்றாக கலவையாக இருக்க வேண்டும். அதிலிருக்கும் கட்டிகளை நன்றாக மசித்து கொள்ளவும்.
வாழைப்பழ பேஸ்ட்டுடன் 1-2 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். அதனை கலந்து கொண்டு ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
இறுதியாக அந்த கலவையில் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து தனியாக வைத்து கொள்ளவும். குளிப்பதற்கு முன்னர் இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும்.
பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் தலையை கழுவினால் சொட்டையாக இருக்கும் இடங்களில் நாளடைவில் தலைமுடி வளர ஆரம்பித்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |