Mango Pudding: மாம்பழ புட்டிங் செய்ய தெரியுமா?
இனிப்பு பண்டங்கள் என்றால் நாம் எல்லோரும் விரும்பி உண்போம். அந்த வகையில் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய மாம்பழத்தை வைத்து ஒரு இனிப்பு பண்டத்தை செய்து பார்க்கலாம்.
மாம்பழ சீசன் வந்துவிட்டதும் எல்லோரது வீட்டிலும் மாம்பழம் இருக்கும். சிலர் மாம்பழத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.
அவர்களுக்காக இந்த பதிவில் மாம்பழத்தை வைத்து புடிங் எவ்வாறு செய்வது என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாம்பழம் - 4
- சக்கரை- கால் கப்
- தண்ணீர் - அரை கப்
- China Grass - 5 கிராம்
- கிரீம் - அரை கப்
- பால் - கால் கப்
செய்யும் முறை
மாம்பழங்களை சுத்தமாக கழுவி தோலை சீவி அதை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாம்பழ துண்டுகளை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் சக்கரை சேர்த்து நல்ல கிரீமியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த மாம்பழ கலவையை வடிகட்டி ஒரு பேனில் ஊற்றி 2 நிமிடம் வேகவைக்க வேண்டும். பின்னர் ஒரே பேனில் தண்ணீர் ஊற்றி China Grass போட்டு அது நன்றாக கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்னர் இதை வடிகட்டி வேகிக்கொண்டிருக்கும் மாம்பழக்கலவையில் சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் பிரஷ் கிரீம் சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் பால் ஊற்றி ஒரு 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். இதற்கு பின்னர் இதை உங்களுக்கு பிடித்த வடிவங்களில் ஊற்றி குளிர்பெட்டியில் எட்டு மணி நேரம் வைக்கவும்.
எட்டு மணி நேரத்தின் பின் எடுத்தால் மாம்பழ புட்டிங் தயார், இதில் நீங்கள் சிறிய மாம்பழ துண்டுகளை போட்டு பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |