தொப்பை முதல் மலச்சிக்கல் வரை தீர்வு கொடுக்கும் கடுக்காய் பொடி... எப்படி சாப்பிடனும்னு தெரியுமா?
பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய சாஸ்திர சம்பிரதாயங்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கை முறை பழக்கங்களாக இருந்தாலும் சரி, உணவு முறையாக இருந்தாலும் சரி அதன் பின்னால் வியக்க வைக்கும் அறிவியல் காரணம் நிச்சயம் இருக்கும்.
அப்படி நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட கடுக்காய் பொடியின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள் பற்றிய முழுமையாக விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சித்த மருத்துவத்தில் ஒரு பழமொழி கூறப்படுகின்றது. அதாவது கடுக்காய் தாயை விட சிறந்தது என்பதே அந்த பழமொழியின் அர்த்தமாகும்.
காய் வகைகளிலேயே அறுசுவையும் ஒருங்கே இணைந்தது என்றால் அது கடுக்காய் தான். அதில் ஏறாளமான மருத்துவ குணங்கள் கடுக்காயை பயன்படுத்தும் போது உள்ளே உள்ள விதையை பயன்படுத்தக் கூடாது.விதையை நீக்கிவிட்டு மேல் தோலோடு சேர்த்து நன்கு பொடித்து, தூனளாகவே பயன்படுத்த வேண்டும்.
கடுக்காயின் மருத்துவ குணங்கள்
கடுக்காயில் அதிகப்படியான துவர்ப்பு சுவை உள்ளதால் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. தினசரி இரவில் சாப்பாட்டக்கு பின்னர் 30 நிமிடங்கள் கழித்து 3 கிராம் அளவு கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பதால், ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
வயிற்று உபாதைகளுக்கு மூல காரணமாக இருக்ககூடிய மலச்சிக்கல் பிரச்சினையை தீர்ப்பதில் கடுக்காய் பெரிதும் துணைப்புரிகின்றது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறப்பு.
கடுக்காயில் கேலின் மற்றும் கேலோனின் எனும் வேதிப்பொருட்கள் செரிந்து காணப்படுவதால், கொழுப்பு சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கொழுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள், தினமும் 3 கிராம் அளவு கடுக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது அல்லது தண்ணீரில் கலந்து குடிப்பது நல்லது.
கடுக்காயில் சபோனின் எனும் ஆல்கலாய்டுகள் உள்ளது. இந்த ஆல்கலாய்டுகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலின் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க போராடுபவர்களுக்கு கடுக்காய் பொடி ஒரு வரப்பிரசதம் என்றால் மிகையாகாது.
பெருங்குடல் பகுதியில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் கடுக்காயில் நிறைந்து காணப்படுவதால், பெருங்குடல் சம்பந்தப்பட்ட அலர்ஜி நோய் இருப்பவர்கள் கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
மேலும் சிறுநீர் தொற்றுகளை சரி செய்வதிலும் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்து சிறுநீர்ப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்ற கடுக்காய் பொடி துணைப்புரியும்.
கடுக்காயில் டானிக் ஆசிட் என்ற மூலக்கூறுகள் இருப்பதால், வாய்ப்புண், வாய் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் கடுக்காய் தூளை மவுத் வாஷாகவும் பயன்படுத்தலாம்.
சிறிதளவில் ரத்த காயங்கள் ஏற்படும் போது அதனை வெளிப்புறமாக கழுவி சுத்தப்படுத்துவதற்கு கடுக்காய் தூளை பயன்படுத்தலாம், ஏனெனில் காயங்களை விரைவில் ஆற்றுவதோடு ரத்தத்தை விரைவில் உறைய வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
பித்தம் சார்ந்த உடல் அமைப்பு கொண்டவர்கள், வாதம் சார்ந்த உடல் அமைப்பு கொண்டவர்களின் திசு வளர்ச்சி விகிதம் சீரற்ற முறையில் இருக்கும். எனவே இவர்கள் தினசரி வாழ்வில் கடுக்காயை சேர்த்துக் கொள்ளும்போது வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கடுக்காய் பொடி உதவுகின்றது.
இது இதய நோய்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. இதனை 3g வீதம் 3 மாத காலத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது நேரடியாக நோய் குறையாவிட்டாலும் கூட, நோய் வருவதற்கான காரணிகள் நாளடைவில் குறைவடைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |