தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டும் புடலங்காய் தொக்கு... இப்படி செய்து பாருங்க
ஊட்டசத்து நிறைந்த காய்கறிகளின் பட்டியலில் புடலங்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. நீர்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், அது உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது.
குறிப்பாக நார்ச்சத்துக்களும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் புடலங்காயில் செரிந்து காணப்படுவதால், மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுப்பதுடன் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

குறிப்பாக நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை செய்வதால் ஏற்படும் தொப்பை பிரச்சினைக்கு உணவில் அடிக்கடி புடலங்காய் சேர்த்துக்கொள்வது தீர்வு கொடுக்கும்.
மேலும் இதில், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துக்களும் காணப்படுவதால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள புடலங்காயை கொண்டு ஆந்திரா பாணியில் அருமையான சுவையில் புடலங்காய் தொக்கு எவ்வாறு எளிமையான முறையில் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய புடலங்காய் -2 கப்
சீரகம் -1 தே.கரண்டி
கடுகு -1/2 தே.கரண்டி
வெந்தயம் -1/4 தே.கரண்டி
மஞ்சள் தூள் -1/4தே.கரண்டி
கொத்தமல்லி தூள் -1 தே.கரண்டி
மிளகாய் தூள் -1 தே.கரண்டி
அரைத்த தக்காளி -2
புளி தண்ணீர் -1 கப்
கறிவேப்பிலை -1 கொத்து
எண்ணெய் -2தே.கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி -2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்த வேர்க்கடலை -2 தே.கரண்டி
எள் 3 ஸ்பூன் -2 தே.கரண்டி
தேங்காய் - துருவியது சிறிதளவு
அரைக்க தேவையானவை
பூண்டு -3 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - நறுக்கியது

செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை, தேங்காய் மற்றும் எள்ளை போட்டு சிறிது தண்ணீர் விட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதையும் அதே போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய புடலங்காயை ஒரு பிரஷர் குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு தே.கரண்டி எண்ணெ சேர்த்து, மிதமான தீயில் சூடாக்கி, சீரகம், கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து, தக்காளி 2 நிமிடங்கள் வதக்கிய பின் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் பொடித்த வேர்க்கடலை, எள் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் புளி தண்ணீர், வேகவைத்த புடலங்காய் ஆகியவற்றை சேரத்து தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து, குழம்பு கெட்டியாகும் வரையில் கொதிக்கவிட்டு, இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் அசத்தல் சுவையில் ஆந்திரா பணியில் புடலங்காய் தொக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |