புகைப்பழக்கத்தை விடமுடியாமல் தவிக்கிறீர்களா? அப்போ இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்
மஞ்சள் நிற வாழைப் பழங்களை விட செவ்வாழைப் பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் பொதுவாக வாழைப்பழம் என்றாலே மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்.அதைதான் பெரும்பாலானோர் சாப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் செவ்வாழைப் பழத்தில் ஏறாளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
செவ்வாழைப் பழத்தில் நன்மைகள்
மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கிறது.
தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் சாப்பிட்டதும் உடனே வயிறு நிரம்பிவிடுகிறது. சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது
செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கலாம். இதிலுள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட உதவுகிறது.
செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உதவுகிறது.
அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆண்டி ஆக்ட்சிடெண்ட் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தலைமுடிக்கு நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |