பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா..?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய காய்கறிகளுள் பீட்ரூட் முக்கிய இடம்வகிக்கின்றது.
ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருக்கும் காயான பீட்ரூட் மிகசிறந்த ஆரோக்கியமான வேர் காய்கறி (root vegetable) ஆக பார்க்கப்படுகின்றது.
இந்த காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. நாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முறையான உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் பீட்ரூட் ஒரு சூப்பர் உணவாக மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகின்றது. பீட்ரூட் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
ஆரம்ப காலத்தில் பீட்ரூட் தாவரத்தின் இலைகளை மாத்திரமே மனிதர்கள் உணவுக்காக எடுத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் பீட்ரூட் கிழங்கை சாப்பிடும் வழக்கம் தொடங்கியது. தினசரி வெறும் வயிற்றிவ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்
பீட்ரூட்டில் காணப்படும் பீட்டெயின் எனும் ரசாயனம் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
தினசரி வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி உள ஆரோக்கியமும் மேம்படும். மனித உடலின் மிக முக்கியமான உறுப்புக்களுள் கல்லீரல் இன்றியமையாதது.
இது பழுதுபட்டால் தன்னைத்தானே சரிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலை கொண்டுள்ளது. கல்லீரல் ஆரோக்கியத்துக்கு பீட்ரூட் பெரிதும் துணைப்புரிகின்றது. சரும பராமரிப்பிலும் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகின்றது.
பீட்ரூட் கொலாஜன் உற்பத்திக்கு துணைப்புரிவதால் சருமம் என்றும் இளமையாக இருக்கும். பீட்ரூட் குறைவான கொழுப்புச்சத்தை கொண்டுள்ளதால் தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |