நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை சூப்... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே எல்லா காலங்கிலும் கிடைக்க்கூடிய முருங்கையின் அனைத்து பாகங்களிலும் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் வாழ்வில் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய தேவையே இருக்காது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். சோயாவில் தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த ஊட்டச்சத்து நிபுணர்கள் தற்காலத்தில், முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.
முருங்கை கீரை சாப்பிடுவதால் உடலில் நோயெதிர்ப்ப மண்டலம் வலுவாகும். அதனால் தொற்று நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை கீரையை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு சூப் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
தேவையான பொருட்கள்
வெண்ணெய் - 2 தே.கரண்டி
பூண்டு - 7-8
இஞ்சி - சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
முருங்கைக்கீரை - 2 கைப்பிடிaளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெண்ணெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பச்சை மிளகாயையும் போட்டு,மிளகுத் தூள், சீரகத் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பிறகு சூப்பிற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்துவிட்டு, 10 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
கடைசியாக முருங்கைக்கீரை 2 கைப்பிடி சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முருங்கைக்கீரை சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |