ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ கொழுக்கட்டை... எப்படி செய்வது?
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் ஆனாலே ஏதாவது ஸ்நாக்ஸ் வாக்கிக்கொடுக்க சொல்லி நச்சரிப்பு ஆரம்பித்துவிடும்.
அப்படி கடைகளில் வாங்கிக்கொடுக்கும் ஸ்நாக்ஸ் எந்தளவுக்கு குழந்தைகளுக்கு ஆரேதக்கியமானது என்பதும், அது சுகாதாரமாக முறையில் செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குறியே.
இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ கொழுக்கட்டையின் எளிமையான படிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 2 தே.கரண்டி
தேங்காய் - சிறிது (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
நன்கு கனிந்த வாழைப்பழம் - 2-4 (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தே.கரண்டி
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
வாழை இலை - சிறிது (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 1 கப் அளவுக்கு நாட்டுச்சர்க்கரை, 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நாட்டுச்சர்க்கரை நன்றாக கரையும் அளவுக்க கொதிக்கவிட்டு அதை இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட தேங்காயை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்கு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே நெய்யில் துண்டுகளாக்கப்பட்ட வாழைப்பழத்தையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் துருவிய தேங்காயை 1/2 கப் சேர்த்து 2 நிமிடம் வதக்ககிய பின்னர் அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி விட்டு, கரைத்து வைத்துள்ள நாட்டுச்சர்க்கரையையும் அதில் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்ததும் அதில் 1 கப் அளவுக்கு கோதுமை மா மற்றும் 2 மேசைக்கரண்டி அரிசி மாவையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு அதனுடன்ட வறுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வரும் வரையில் கிளறிவிட்டு இறக்கி குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து கொழுக்கட்டை மாவானது ஓரளவு ஆறிய பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து, மடித்துக் கொள்ள வேண்டும்
அதே போன்று அனைத்து மாவையும் வாழை இலைகளில் வைத்து மடித்து, இட்லி தட்டில் அடுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து , மிதமான தீயில் வைத்து, பத்து நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவி்ட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ இலை கொழுக்கட்டை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
