60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? அப்போ இந்த விடயங்களை கடைப்பிடிங்க
பொதுவாக ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது.
வெறும் அழகுசாதன பொருட்களால் என்றும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு நாம் சில வாழ்க்கை முறை பழங்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக, 40 வயது கடந்தாலே, வயதான தோற்றம் ஏற்பட ஆரம்பித்துவிடுகின்றது.
சருமம் பொலிவிழத்தல், இளநரை, வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தொடங்கி விடுகின்றன. இதனை தவிர்த்து என்றும் சருமம் மற்றும் கூந்தலை இளமை பொலிவுடன் வைத்துக்கொள்ள இன்றியமையாத சில பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இளமை காக்கும் வழிமுறைகள்
மசாஜ் : உங்கள் கால்கள் மற்றும் கைகளின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தினசரி மசாஜ் செய்பது சருமத்தின் இளமை தோற்றத்துக்கு உதவும். உங்கள் தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்தி நீண்ட இளமையை பெற இது பெரிதும் துணைப்புரியும்.
கழிவுகளை தினமும் வெளியேற்றுவது : உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் சருமத்தின் இளமை தோற்றத்தை பெரிதும் பாதிக்கும். எனவே உடலில் கழிவுகளை தங்கவிடாடல் பார்த்துக்கொள்வது அவசியம்.
தினமும் முறையாக நேரத்திற்கு மலம் கழிப்பது, சரியான கால இடைவெளியில் சிறுநீர் கழிப்பது மற்றும் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துவது இளமை தோற்றத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
போதியளவு தண்ணீர் : தண்ணீர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க இன்றியடையாதது. தினசரி போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் சருமம் பொலிவாகவும் ஆரலிப்பாகவும் இருக்கும். அதனால் சருமத்தில் விரையில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுக்காக்கலாம்.
உடற்பயிற்சி : மன அழுத்தம் இன்றி அமைதியாக இருக்கவும் நோய் நிலைகளை தவிர்க்கவும் உடற்பயிற்ச்சி இன்றியமையாதது. சருமத்தை இளமையாகவும், உறுதிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதால் என்றும் இளமையாக இருக்கலாம்.
ஆரோக்கியமான உணவு : கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இரண்டும் அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது இளமையை தக்கவைத்துக்கொள்ள மிகவும் முக்கியமானமாகும். எனவே பச்சை காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வைடட்மின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல தூக்கம் : ஆழ்ந்த தூங்கம் சருமத்தையும் மனநிலையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இன்றியமையாமது. என்றும் இளமையாக இருக்க விரும்பினால் தினசரி குறைந்தது, 6 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
சரும பராமரிப்பு : சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்குவது இளமையை பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் பெருகின்றது. எனவே வாரத்திற்கு ஒருமுறை அவசியம் சருமத்தை ஸ்க்ரப் செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
