ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக வேண்டுமா? அப்போ தினமும் இந்த பொடிய மறக்காம சாப்பிடுங்க
பொதுவாக நாம் பார்க்கும் சில பேர் நாள் தோறும் புலம்பும் விடயங்களில் ஒன்று தான் இந்த அதிக எடை.
இதனால் சிலருக்கு வேலை, திருமணம் என வாழ்க்கையின் முக்கியமான விடயங்கள் எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்காமல் தள்ளி போகின்றது.
இதனை தொடர்ந்து என்ன தான் பண்ணாலும் இந்த தொப்பை குறையவே வில்லை என புலம்பும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் ஆயுள் வேத முறையில் ஐந்து வீட்டு பொருட்களை கொண்டு நம்முடைய தொப்பையை எப்படி குறைக்கலாம் என்பது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தொப்பையை குறைக்க சில டிப்ஸ்
1. திரிபலா பொடி
திரிபலா பொடி என அழைக்கப்படுவது, கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கப்பட்ட ஒரு கலவையாகும்.
இதனை வெதுவெதுப்பான ஒரு டம்ளர் தண்ணீரில் தூங்குவதற்கு முன்னர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் செரிமானம் சிறப்பாக இடம்பெற்று எடை குறையும்.
2. வெதுவெதுப்பான நீர் + எலுமிச்சை சாறு
காலை எழுந்தவுடன் டீ, காபி பதிலாக வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் செரிமானத்தை தூண்டப்படும். கெட்ட நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி வயிற்று உப்புசம் குறையும்.
3. இஞ்சி டீ
வீடுகளில் இருக்கும் மூலிகை பொருட்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது இஞ்சி தான். காலையில் இஞ்சி டீ குடிதெ்தால் செரிமாணம் சிறப்பாக நடைப்பெற்று எடை காலப்போக்கில் குறையும்.
மேலும், இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால், ஷோகால் என்ற சேர்மங்கள் தொப்பையில் காணப்படும் கொழுப்பை எரித்து உடல் எடையை குறைத்து விடுகின்றது.
4. குறைந்த கொழுப்பு கொண்ட உணவு
எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது அதிகம் கொழுப்பு கொண்ட உணவுகளை எடுத்து கொள்வது தான்.
இதனால் குறைந்த கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை இரவு வேளைகளில் எடுத்து கொள்ள வேண்டும். பசி வந்தால் நொருக்கு தீனி அதிகம் சாப்பிடுவோம். இதனை தவிர்த்து கொள்ள வேண்டும்.
5. யோகா பயிற்சி
யோகா என்பது உடல் செயல்பாடு, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் என அனைத்தையும் கண்முன் காட்டும் ஒரு உடற்பயிற்சியாகும். இதனால் தினமும் காலையில் எழுந்தவுடன் யோகா செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் தொப்பை மிகவும் வேகமாக குறையும்.