இந்த 5 குணங்கள் இல்லாதவர்கள் நல்ல குடும்ப தலைவனாக இருக்க முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறந்த குடும்ப தலைவாக இருக்க நிச்சயம் குறிப்பிட்ட சில குணங்கள் இன்றியமையாதது.
சாணக்கியரின் கருத்துப்படி இந்த குணங்கள் இல்லாத நகர்கள் சிறந்த குடும்பத் தலைவனாக தங்களின் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்ற முடியாது என்கின்றார்.
அப்படி சாணக்கியர் கூறும் முக்கிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
செலவு செய்வதில் கவனம்
சாணக்கியரின் கருத்துப்படி குடும்பத்தலைவர் பணத்தை கையாளும் போது மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.
அலட்சியமாக பணத்தை செலவு செய்யும் பழக்கம் கொண்ட நபர்கள் ஒரு நல்ல தந்தையாகவும் சிறந்த கணவனாகவும் இருக்கவே முடியாது.
இப்படிப்பட்டவர்களால் குடும்பம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கவேண்டி ஏற்படும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
பொறுப்பு
குடும்பத் தலைவர் எப்போதும் தலைதை வகிக்கும் இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்போது என்ன தேவைப்படுகின்றது குழந்தைகளின் படிப்புக்கு எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்த பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதில் பெறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.இப்படி இல்லாதவர்கள் குடும்ப தலைவராக இருக்க தகுதியற்றவர்கள் என்கின்றார் சாணக்கியர்.
உறுதியான தீர்மானம்
குடும்ப தலைவர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். ஸ்தீரமற்ற முடிவுகளை எடுக்கும் ஆண்கள் நிச்சயம் சிறந்த குடும்ப தலைவனாக இருக்க வாய்ப்பில்லை.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நல்ல குடும்ப தலைவர்கள் தங்கள் எடுக்கும் முடிவுகளை தெளிவாக ஆராய்ந்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் முடிவுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க கூடாது என்கின்றார்.
ஒழுக்கம்
சாணக்கிய நீதியின் பிரகாரம் குடும்பத் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளுள் ஒழுக்கம் இன்றியமையாதது.
ஒருக்கமற்ற குடும்ப தலைவர்கள் அந்த குடும்பத்துக்கு சாபம் போன்றவர்கள். இவர்களால் அந்த குடும்பத்தின் வளர்ச்சி அதள பாதாளத்தை நோக்கி சென்றுவிடும் என்கின்றார் சாணக்கியர்.
விசுவாசம்
ஒரு நல்ல குடும்பத்தலைவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது விசுவாசம் கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆதாரம் இல்லாமல் யாரையும் எதையும் நம்பாதவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீது நம்பிக்கை இல்லாத குடும்ப தலைவர்களால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் . இந்த ஐந்து குணங்களும் இல்லாதவர்களால் நிச்சயம் நல்ல குடும்பத் தலைவராக திகழ முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |