தலையில் பேன் தொல்லைக்கு உடனடி நிவாரணம் தரும் எண்ணெய்- எப்படி செய்றாங்க தெரியுமா?
நம்மிள் பலருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் பேன் தொல்லையும் ஒன்று. இந்த ஒட்டுண்ணி தலையில் இருந்து கொண்டு மனித ரத்தம் மற்றும் அழுக்குகளை சாப்பிட்டு வளரும்.
கொஞ்சம் கவனிக்காமல் விட்டுவிட்டால் தலையில் முழுவதும் பரவி, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் செல்லும்.
"பேன் பொதுவாக 7 தலைக்கு இடம்மாறும்..” என கிராமங்களில் கூறுவார்கள். ஆனால் பேன் உள்ளவர்களின் உடல் மற்றும் அவர்களின் ஆடை உள்ளிட்ட பல இடங்களில் நகர்ந்து கொண்டிருக்கும்.
பாடசாலைக்கு செல்லும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது. அதிக வியர்வை ஏற்படும் பொழுது பேன்கள் இனம்பெருக்கம் செய்யும். இவ்வளவு செய்யும் பேன்கள் கடிக்கும் பொழுது ஒருவிதமான அரிப்பு உண்டாகும்.
அரிப்பை தாங்க முடியாமல் நகங்களால் நாம் தலையிலுள்ள சருமத்தை காயப்படுத்தினால் அதிலிருந்து வேறு விதமான தொற்றுக்கள் பரவி பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
பேன் உள்ளவர்கள் முடிந்தளவு உங்களின் தலை மற்றும் தலைமுடியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், பேன் தொல்லை முற்றாக அழிக்க நினைப்பவர்கள் கீழுள்ள எண்ணெயை தடவினால் பேன் தொல்லைக்கு முடிவுக்கட்டலாம். அந்த எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- நன்றாக வடிகட்டிய தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
- வெற்றிலை – 8 இலைகள்
- புதினா இலை – 10 இலைகள்
- பூண்டு – 4 பல்
- சிறு கருஞ்சீரகம் – 1 மேசைக்கரண்டி
- யூகலிப்டஸ் எண்ணெய் – 5 சொட்டு (குழந்தைக்கு தேவையில்லை)
- கஸ்தூரி மஞ்சள் தூள் – 1/4 மேசைக்கரண்டி
- வேப்பிலை- கைபிடி அளவு
எண்ணெய் தயாரிப்புமுறை
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில், தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் அப்படியே விடவும்.
அதன் பின்னர் தேங்காய் எண்ணெயுடன் வெற்றிலை, புதினா இலை, பூண்டு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சூடு அதிகமாக இருந்தால் எண்ணெய் ஆவியாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சூட்டை மிதமான வெப்பநிலையில் வைப்பது சிறந்துது.
அதனுடன் கருஞ்சீரகம், மஞ்சள் தூள், வேப்பிலை சேர்க்கவும். இது தலையில் இருக்கும் தொற்றுக்களை அகற்ற உதவியாக இருக்கும். இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு சில நிமிடங்கள் அதே சூட்டில் வைத்திருந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
தேங்காய் எண்ணெய் ஆறியதும், யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து, சுத்தமான கண்ணாடி போத்தலில் ஊற்றி வைக்கவும். அதே சமயம், இந்த எண்ணெய் குழந்தைகளுக்கு என்றால் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்க்காமல் விட்டால் பாதுகாப்பாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை
- பேன் தொல்லை இருப்பவர்கள் இந்த எண்ணெயை சிறிது எடுத்து கையில் நன்றாக தடவிக் கொள்ளவும்.
- அதன் பின்னர் உங்கள் விரலால் நன்கு தலைக்கு படும்படி அழுத்தமாக தேய்க்கவும்.
- சரியாக 30 நிமிடங்கள் தலையில் எண்ணெயை ஊற விட்டு அதன் பின்னர், நன்கு சீப்பு போட்டு சீவினால் பேன்கள் எல்லாம் சீப்புடன் வந்துவிடும்.
- இதனை தொடர்ந்து ஹெர்பல் ஷாம்பூ போட்டு, சாதாரண குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால் தலையில் உள்ள பேன் ஒழிந்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |